மாநகராட்சி மண்டலம் 3-ல் குறைதீர்க்கும் கூட்டம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 3-ல் குறைதீர்க்கும் கூட்டம் 4-ந் தேதி நடக்கிறது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3-ல் குறைதீர்க்கும் கூட்டம் 4-ந் தேதி நடக்கிறது.
குறைதீர்க்கும் கூட்டம்
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ளபொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி வரும் 4-ந் தேதி மேலமாரட் வீதியில் உள்ள மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மேயர் இந்திராணி தலைமை தாங்கி மனுக்கள் வாங்குகிறார். கமிஷனர் பிரவீன் குமார் முன்னிலை வகிக்கிறார்.
அதில் மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு பகுதிகள் வார்டு எண்.50 தமிழ்ச்சங்கம் ரோடு, வார்டு எண்.51 கிருஷ்ணன்கோவில் தெரு, வார்டு 52 ஜடாமுனி கோவில் தெரு, வார்டு எண்.54 காஜிமார் தெரு, வார்டு எண்.55 கிருஷ்ணராயர் தெப்பக்குளம், வார்டு எண்.56 ஞானஒளிவுபுரம், வார்டு எண்.57 ஆரப்பாளையம், வார்டு எண்.58 மேலப்பொன்னகரம், வார்டு எண்.59 ரயில்வே காலனி, வார்டு எண்.60 எல்லீஸ் நகர்.
பயன்பெறலாம்
வார்டு எண்.61 எஸ்.எஸ்.காலனி, வார்டு எண்.62 அரசரடி, வார்டு எண்.67 விராட்டிபத்து, வார்டு எண்.68 பொன்மேனி, வார்டு எண்.69 சொக்கலிங்கநகர், வார்டு எண்.70 துரைச்சாமி நகர், வார்டு எண்.75 சுந்தரராஜபுரம், வார்டு எண்.76, மேலவாசல், வார்டு எண்.77 சுப்பிரமணியபுரம் ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை கொடுத்து பயன்பெறலாம். இந்த தகவல் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.