மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் குறை தீர்க்கும் கூட்டம்- 10-ந்தேதி நடக்கிறது


மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் குறை தீர்க்கும் கூட்டம்- 10-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 4 Jan 2023 1:34 AM IST (Updated: 4 Jan 2023 4:38 PM IST)
t-max-icont-min-icon

மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் குறை தீர்க்கும் கூட்டம் 10-ந்தேதி நடக்கிறது.

மதுரை


மத்திய, மாநில அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு நிதி உங்கள் அருகில் என்னும் குறை தீர்க்கும் கூட்டம் மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாதம் 10-ந்தேதி குறை தீர்க்கும் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் நிறுவன முதலாளிகள், வைப்பு நிதி உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதி சம்பந்தமான சந்தேகங்கள், குறைகள் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளரால் விசாரிக்கப்பட்டு தீர்வு தரப்படும்.

இந்த காணொலி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக Microsoft Teams App செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பிறகு தாங்கள் கலந்து கொள்வதற்கான விவரத்தை தங்கள் செல்போன் எண்ணுடன் மண்டல அலுவலக மின்அஞ்சல் முகவரிக்கு ro.madurai@epfindia.gov.in 6-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மண்டல அலுவலகத்தில் இருந்து இந்த காணொலி கூட்டத்தில் பங்கெடுப்பதற்கு தொடர்பு எண் தனியாக தெரிவிக்கப்படும். அந்த எண்ணை பயன்படுத்தி காணொலி கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று மதுரை மண்டல ஆணையாளர் அமியாகான்ட் தெரிவித்தார்.

இந்த தகவலை வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சுப்பிரமணி தெரிவித்து உள்ளார்.


Next Story