மனுவில் உள்ள குறைகளை தெரிவிக்க வேண்டும்


மனுவில் உள்ள குறைகளை தெரிவிக்க வேண்டும்
x

தர்வு காண முடியாத மனுக்களாக இருந்தால் மனுவில் உள்ள குறைகளை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர்

குறைதீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் வீட்டுமனை பட்டா, கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 315 பொது நலமனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

மநுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தெரிவிக்க வேண்டும்

வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும். தீர்வு காண முடியாத மனுக்களாக இருந்தால் சம்மந்தப்பட்ட மனுதாரரை தொடர்பு கொண்டு மனுவில் உள்ள குறைகளை தெரியப்படுத்த வேண்டும். அதேபோல, அரசுத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக இருந்தால் அதுபற்றி முன்கூட்டியே தெரியப்படுத்தி வாரந்தோறும் அந்தந்த துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி, அதன் விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அனைத்து அரசு முதல் நிலை அலுவலர்கள் தவறாமல் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வழிதேட வேண்டும் என கூறினார்.

மகனை மீட்டுத்தர வேண்டும்

கூட்டத்தில் வாணியம்பாடி வட்டம், புருஷோத்தபுரம் பகுதியை சேர்ந்த இலக்கியம்மா என்பவர் கொடுத்த மனுவில், எனது மகன் சந்தோஷ் குமார் (வயது 24) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். அவரை பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது என் மகன் என்ன ஆனார் என்பதே எங்களுக்கு தெரியவில்லை. எனவே என் மகனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 30 திருநங்கைகளுக்கு காப்பீடு அட்டையை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்தையன், தனித்துணை கலெக்டர் பெலிக்ஸ்ராஜா, ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story