கடன் தொல்லையால் மளிகை கடைக்காரர் தற்கொலை


கடன் தொல்லையால் மளிகை கடைக்காரர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Aug 2022 1:45 AM IST (Updated: 19 Aug 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லையால் மளிகை கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

பனமரத்துப்பட்டி:-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர் பர்குணம் (வயது 40). இவர் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வந்தார். இதனிடையே பர்குணம், பலரிடம் கடன் பெற்று விட்டு, அதனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் பர்குணம் மளிகை கடையின் உள்ளே மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story