புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை


புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
x

சிதம்பரத்தில் திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

சிதம்பரம்

நகராட்சி டிரைவர்

சிதம்பரம் வடக்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் வீரக்கண்ணு. இவருடைய மகன் செந்தமிழ்செல்வன் (வயது 28). இவர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த மகேந்திரப்பள்ளி பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி செந்தமிழ்செல்வன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தமிழ்செல்வன் பரிதாபமாக இறந்தார்.

சாவு

இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story