புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
புதுமாப்பிள்ளை
திருச்சி உறையூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் வீட்டில் வைத்து ஆவின் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கடந்த மாதம் 23-ந் தேதி ஷாலினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் ஷாலினிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்கொலை
இந்நிலையில் ேநற்று முன்தினம் வீட்டில் கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த உறையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காா்த்திக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 8 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.