புதுமாப்பிள்ளை தற்கொலை
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி நாட்டாமைக்காரர் தெருவை சேர்ந்தவர் சுந்து மகன் ராஜ்குமார் (வயது 29). இவர் பாண்டியராஜபுரத்தில் உள்ள டிராக்டர் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நாகலட்சுமி (25) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் நாகலட்சுமி கணினி பயிற்சி வகுப்பு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மாடியில் உள்ள அறையில் ராஜ்குமார் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் ராஜ்குமாரை மீட்டு வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜ்குமார் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.