மோட்டார்சைக்கிள்கள் மோதலில் மணமகனின் தாய் பலி- திருமணம் நின்றது


மோட்டார்சைக்கிள்கள் மோதலில் மணமகனின் தாய் பலி- திருமணம் நின்றது
x

கலசபாக்கம் அருகே 3 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் இன்று திருமணம் நடக்க இருந்த மணமகனின் தாய் பலியானார். இதனால் மகனின் திருமணம் நின்று போனது.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே 3 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் இன்று திருமணம் நடக்க இருந்த மணமகனின் தாய் பலியானார். இதனால் மகனின் திருமணம் நின்று போனது.

3 மோட்டார்சைக்கிள்கள் மோதல்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் அகரம் சிப்பந்தி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவரது திருமணம் நாயுடுமங்கலத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் மணமகன் சதீஷ்குமார் அவரது தாயார் மல்லிகாவுடன் (வயது 45) திருவண்ணாமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்த அயோத்தி என்பவர் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வடபுழுதியூர் பகுதி சேர்ந்த துரைமுருகனும் நாயுடு மங்கலத்தில் இருந்து தனது ஊருக்கு செல்வதற்காக கூட்ரோடு சாலையில் திரும்பி உள்ளார்.

அப்போது அதிவேகத்தில் வந்த அயோத்தி திடீரென எதிர்ப்புற திசையில் வண்டியை திருப்பி உள்ளார். அதே நேரத்தில் திருவண்ணாமலையிலிருந்து நாயுடு மங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த சதீஷ்குமார் மோட்டார் சைக்கிள் மீது இவரது மோட்டார்சைக்கிள் அதிவேகமாக மோதியது. மேலும் துரைமுருகன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் நிலை தடுமாறியது. இதில் 3 மோட்டார் சைக்கிளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் சதீஷ்குமாரின் தாயார் மல்லிகாவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

திருமணம் நின்றது

அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். மேலும் ராஜேஷ் குமார், துரைமுருகன் ஆகிேயார் படுகாயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சதீஷ்குமார் லேசான காயத்துடன் தப்பினார். தாய் மல்லிகா இறந்ததால் இன்று நடைெபற இருந்த சதீஷ்குமாரின் திருமணம் நின்றது. விபத்து குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



Next Story