ரூ.33½ லட்சத்தில் பள்ளி வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா
தண்டலை ஊராட்சியில் ரூ.33½ லட்சத்தில் பள்ளி வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்திற்கு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் புதிதாக க50 பள்ளி கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில ்ரூ.33.48 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில் வேலூரில் இருந்து காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கலியபெருமாள், ஒன்றியக்குழு தலைவர் தேவா, முதன்மை கல்வி அலுவலர் விஜயா, பாஸ்கர், தண்டலை ஊராட்சி மன்றத்தலைவர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.