உப்பாறு ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது.


உப்பாறு ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது.
x

உப்பாறு ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது.

திருப்பூர்

குடிமங்கலம்

உப்பாறு ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது.

உப்பாறு ஓடை

தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு காரணமாக இருப்பதில் கிணறு, குளம், குட்டை, ஏரி ஓடை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. சில இடங்களில் இவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதாலும், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகள் கொட்டப்படுவதால் பாழாகி வருகிறது.

குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. மழை காலங்களில் பெய்யும் மழைநீர் உப்பாறு ஓடை வழியாக சென்று உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணையின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயநிலங்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் பாசன வசதி பெறுகிறது. உப்பாறு ஓடையை சுற்றியுள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.

நடவடிக்கை

கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் காய்கறி, மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடியில் ஈடுபடுகின்றனர். உப்பாறு ஓடையின் குறுக்கே பல இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

உப்பாறுஓடையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கழிவுகள், குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் இரவு நேரங்களில் உப்பாறு ஓடையில் கொட்டப்படுகிறது.

இதனால் உப்பாறு ஓடையில் மழைக்காலங்களில் வரும் மழைநீர் கழிவுகளுடன் கலப்பதால் மாசடைந்து வருகிறது.

இப்பகுதியில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. கால்நடைகள் ஓடையில் மாசடைந்த தண்ணீரை குடிப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே உப்பாறு ஓடையில் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓடையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story