ஓட்டப்பிடாரம் பகுதியில் ரூ.30 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா


ஓட்டப்பிடாரம் பகுதியில் ரூ.30 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா
x

ஓட்டப்பிடாரம் பகுதியில் ரூ.30 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கலப்பைபட்டி கிராமத்தில் ரூ.23 ½ லட்சம் செலவில் பஞ்சாயத்து அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். கலப்பைபட்டி பஞ்சாயத்து தலைவர் சண்முகசுந்தரி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர், நாரைக்கிணறு கிராமத்தில் ரூ.6 ½ லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டி பணி தொடங்கி வைத்தார். இந்த விழாக்களில் யூனியன் உதவி பொறியாளர் ரவி, யூனியன் பணி மேற்பார்வையாளர் சங்கர், கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story