புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பில் புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இட்டமொழி:
நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா மன்னார்புரம் சந்திப்பு பகுதியில், தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம், வடக்கன்குளம் மறைவட்டங்கள் அடங்கிய தென்மண்டலத்திற்கு என்று புதிய மேய்ப்பு பணி நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. முதன்மை குரு பன்னீர்செல்வம், பொருளாளர் சகாயம், தூத்துக்குடி, சாத்தான்குளம், வடக்கன்குளம் மறை மாவட்டங்களின் முதன்மை குருக்கள் ஜான் பென்சன், ஜான் பிரிட்டோ, ஜோசப் ரவிபாலன், தூத்துக்குடி மண்டலம், தென் மண்டலம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்டார்வின், நெல்சன் பால்ராஜ், மன்னார்புரம் அன்னை தெரசா ஊரக மேம்பாட்டு மைய இயக்குனர் விக்டர், மன்னார்புரம் பங்குத்தந்தை எட்வர்ட், மறைமாவட்ட தென்மண்டல பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப் ஸ்டாலின், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர் மற்றும் தென்மண்டல பங்குத்தந்தைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.