நிலக்கடலை ரூ.12½ லட்சத்திற்கு ஏலம்
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.12½ லட்சத்திற்கு ஏலம் போனது.
நொய்யல்,
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டுவருகிறது. இங்கு வாரந்தோறும் நிலக்கடலை ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றிய விவசாயிகள் தாங்கள் விளைவித்த நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு நிலக்கடலை மூட்டைகளை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 184.40½ குவிண்டால் எடை கொண்ட 535 மூட்டை நிலக்கடலை ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் அதிகபட்ச விலையாக ஒரு கிலோ நிலக்கடலை ரூ.71.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ ரூ.64.29-க்கும், சராசரி விலையாக ஒரு கிலோ ரூ.69.40க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக சாலைப்புதூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.12 லட்சத்து 61 ஆயிரத்து 23-க்கு விற்பனையானது.