தண்ணீர் இன்றி நிலக்கடலை செடிகள் கருகும் அபாயம்


வேதாரண்யம் பகுதியில் தண்ணீர் இன்றி நிலக்கடலை செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குளத்தில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து பயிர்களுக்கு விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் தண்ணீர் இன்றி நிலக்கடலை செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குளத்தில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து பயிர்களுக்கு விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர்.

நிலக்கடலை சாகுபடி

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம், பெரியகுத்தகை, செம்போடை, தேத்தாகுடி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

நிலக்கடலை செடிகள் நன்கு வளர்ந்து 20 நாள் முதல் 40 நாட்களான பயிராக உள்ளது.

தண்ணீர் இன்றி கருகும் அபாயம்

இந்த நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் நிலக்கடலை செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், இந்த தண்ணீர் பயிர்களுக்கு போதுமானதாக இல்லை. இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் வடக்கிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

கூடுதல் செலவு

தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ள நிலக்கடலை செடிகளுக்கு, அருகில் உள்ள குளம், குட்டைகளில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து பாய்ச்சி வருகின்றனர். இதனால் கடலை சாகுபடிக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


Next Story