வரத்து குறைவால் நிலக்கடலை விலை உயர்வு


வரத்து குறைவால் நிலக்கடலை விலை உயர்வு
x

வரத்து குறைவால் நிலக்கடலை விலை உயர்ந்துள்ளது.

கரூர்

குளத்துப்பாளையம், குந்தாணிபாளையம், வடுகபட்டி, வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்தவுடன் காய வைத்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பின்னர் எண்ணெய் தயாரிக்கும் மில்களுக்கும், நிலக்கடலை பருப்பு விற்பனை செய்யும் கடைகளுக்கும் மூட்டைகளாக அனுப்பி வைக்கின்றனர். வரத்து குறைவால் ஒரு கிலோ நிலக்கடலை அதிகபட்ச விலையாக ரூ.71-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64-க்கும் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.


Next Story