அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ரூ.1½ லட்சத்துக்கு ஏலம்


அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ரூ.1½ லட்சத்துக்கு ஏலம்
x

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ரூ.1½ லட்சத்துக்கு ஏலம்

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர், ஓலகடம், அத்தாணி, கள்ளிப்பட்டி, கோவிலூர், எண்ணமங்கலம், உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நிலக்கடலை கொண்டு வரப்பட்டன. நிலக்கடலை (பச்சை) 18 மூட்டைகள் வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 89-க்கும், அதிகபட்சமாக ரூ.3 ஆயிரத்து 809-க்கும் ஏலம் விடப்பட்டன.

நிலக்கடலை (காய்ந்தது) 38 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 10-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 191-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 592-க்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது. திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் நிலக்கடலையை ஏலம் எடுத்து சென்றனர்.


Next Story