குரூப்-1 தேர்வை 3,134 பேர் எழுதினார்கள்


குரூப்-1 தேர்வை 3,134 பேர் எழுதினார்கள்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில், குரூப்-1 தேர்வை 3,134 பேர் எழுதினார்கள்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில், குரூப்-1 தேர்வை 3,134 பேர் எழுதினார்கள்.

குரூப்-1 போட்டி தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 போட்டித்தேர்வு நேற்று நடந்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில் இந்த குரூப்-1 தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், குந்தாரப்பள்ளி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 19 மையங்களில் குரூப்-1 தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத மொத்தம் 5 ஆயிரத்து 512 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வை 3,134 பேர் எழுதினார்கள். 2 ஆயிரத்து 378 பேர் தேர்வு எழுத வரவில்லை.

91 பேர் கண்காணிப்பு

இந்த தேர்வை கண்காணிக்க 19 முதன்மை கண்காணிப்பாளர்களும், 2 பறக்கும் படையினரும், 6 நடமாடும் அலகுகளும், 19 ஆய்வு அலுவலர்கள், 20 வீடியோகிராபர்கள், 6 ஆயுதம் ஏந்திய போலீசார், 19 தேர்வு கூட காவலர்கள் என மொத்தம் 91 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1 போட்டி தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு பஸ் வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி என அனைத்து விதமான அடிப்படை வசதிகளும், சிறப்பு நடமாடும் மருத்துவ குழுவும் தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story