239 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு


239 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு
x

தஞ்சை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 239 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 67,728 பேர் எழுதுகின்றனர்.

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 239 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 67,728 பேர் எழுதுகின்றனர்.

குரூப்-4 தேர்வு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்தநிலையில் தமிழகஅரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர்கள், பில் கலெக்டர்கள், நிலஅளவையர் போன்ற பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடக்கிறது.காலியாக உள்ள 7,301 பணியிடங்களுக்கு 21 லட்சத்து 85 ஆயிரம் விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள், 316 தாலுகா மையங்களில் உள்ள 7,689 மையங்களில் தேர்வு நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் 239 மையங்களில் குரூப்-4 தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 67 ஆயிரத்து 728 பேர் எழுதுகின்றனர். ஒரு தேர்வு மையத்திற்கு 2 போலீசார் வீதம் 478 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சிறப்பு பஸ்கள்

மேலும் துப்பாக்கி ஏந்திய 55 ஆயுதப்படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வினாத்தாளை பாதுகாப்பாக தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்வதற்காக ஆயுதம் ஏந்திய போலீசார் தயார் நிலையில் உள்ளனர். மேலும் தேர்வு எழுத வருபவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


Next Story