போலீசார் சார்பில் குழு விவாதம்


போலீசார் சார்பில் குழு விவாதம்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் போலீசார் சார்பில் குழு விவாதம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றவாளிகளுக்கு மனித உரிமை தேவையா? தேவையற்றதா? என்ற தலைப்பில் போலீசார் சார்பில் குழு விவாதம் நடந்தது. இந்த குழு விவாதத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் போலீஸ்துறையினர் 6 அணிகளாக பிரிந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட தலைப்பில் விவாதம் நடத்தினர். இதில் 2 தலைப்புகளிலும் சிறப்பாக பேசிய போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story