ஜி.எஸ்.டி. குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
ஜி.எஸ்.டி. குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
வெளிப்பாளையம்:
நாகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரி துணை ஆணையர் (திருச்சி) சுரேஷ்குமார் மீனா தலைமை தாங்கினார். நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நாகை ெரயில் நிலையம் முன் தொடங்கி கலங்கரை விளக்கம் சாலை வரை சென்று பின்னர் ெரயில் நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். இதில் சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், இந்திய வர்த்தக குழுமத்தினர், வரி செலுத்துவோர்கள், தணிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.