ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சிறு வணிகர்களுக்கு எதிரானது - தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன்


ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சிறு வணிகர்களுக்கு எதிரானது  - தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன்
x
தினத்தந்தி 27 Nov 2022 8:53 PM GMT (Updated: 28 Nov 2022 5:54 AM GMT)

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சிறு வணிகர்களுக்கு எதிரானது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் குற்றம்சாட்டினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சிறு வணிகர்களுக்கு எதிரானது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் குற்றம்சாட்டினார்.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை குமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமை தாங்கினார். ஜெபராஜ் வரவேற்றார். பால்ராஜ், சலீம், ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். மேலும் மாநில பொதுச் செயலாளர் மணி, உயர் மட்ட குழு உறுப்பினர் கருப்பையா, பேரவை துணைத் தலைவர் ஜார்ஜ் ஆகியோர் பேசினர். முடிவில் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.

பேட்டி

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

மொத்த வணிகர்கள் அன்னிய வணிகர்களுடன் கைகோர்த்துக் கொண்டு சில்லறை வணிகத்தை சீரழிக்கிறார்கள். எனவே சில்லறை வணிகர்களை காப்பாற்ற வேண்டும். அன்னிய வணிகத்தை ஒழிக்க வேண்டும். நம் நாட்டு வணிகத்தை வளர்க்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சிறு வணிகர்களுக்கு எதிரானதாகும். அரிசிக்கு வரி கொண்டு வந்து உள்ளார்கள். இந்தியாவில் அநேக மாநிலங்களில் அரிசி, பருப்புக்கான வரியை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். அரிசிக்கு வரி விதித்திருப்பதை ஏற்க முடியாது. ஏழை எளிய சாமானிய மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயரும். எனவே இதை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். மக்களை பாதிக்காத வகையில் வரி விதிப்பு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story