ரெயில் மோதி காவலாளி சாவு


ரெயில் மோதி காவலாளி சாவு
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெய்யூர் அருகே ரெயில் மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

நெய்யூர் அருகே ரெயில் மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆஸ்பத்திரி காவலாளி

திருவட்டார் அருகே நெட்டறவிளை பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 73). இவர் நெய்யூர் சி.எஸ்.ஐ. மிஷன் ஆஸ்பத்திரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நெய்யூர் பரம்பையில் ரெயில்வே மேம்பால பணி நடந்து வருவதால் திருவட்டாரில் இருந்து வரும் வில்சன் பரம்பை பஸ் நிறுத்தத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்து செல்வது வழக்கம்.

நேற்று காலையும் அதேபோல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நெய்யூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

ரெயில் மோதி சாவு

அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ெரயில் அவர் மீது மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் வில்சன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் மற்றும் நாகர்கோவில் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் ரெயில்வே போலீசார் வில்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தை கடக்க முயன்ற போது காவலாளி ரெயில் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story