கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணி


கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணி
x
தினத்தந்தி 28 Feb 2023 2:00 AM IST (Updated: 28 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் குளுகுளு சீசன் தொடங்குவது வழக்கம். அதேபோல் கோடை சீசனையொட்டி மே மாதம் 3-வது வாரம் மலர் கண்காட்சி நடைபெறும். இதனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நகரின் மையப்பகுதியில் உள்ள பிரையண்ட் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, மலர் கண்காட்சிக்கு செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி, சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரையண்ட் பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பூங்காவில் உள்ள 740 வகைகளில் பூக்கும் வண்ண ரோஜா செடிகளுக்கு கவாத்து செய்யும் பணியும், கவாத்து செய்த ரோஜா செடிகளுக்கு பூஞ்சை தடுப்பு மருந்து மற்றும் இயற்கை உரங்கள் வைக்கும் பணியும் நேற்று தொடங்கியது.

இதுகுறித்து பூங்கா தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறுகையில், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா செடிகளில் கவாத்து செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த செடிகளில் அடுத்த 45 முதல் 60 நாட்களில், அதாவது கோடை சீசனுக்கு முன்னதாக விதவிதமான வகைகளில் வண்ண ரோஜா பூக்கள் பூத்து சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் என்றார்.


Next Story