காவலர்களுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி
காவலர்களுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி
போலீஸ்துறையில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீர வணக்கம் நாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் தலைமையில் காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்று 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளதுரை மற்றும் உயிர்நீத்த காவலர் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் உயிர்நீத்த 11 போலீசாரின் வீடுகளுக்கு, அதிகாரிகள் நேரடியாக சென்று, உயிர் நீத்தவர்களின் புகைப்படத்திற்கு வீர வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினர். முன்னதாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது.