புகையிலை குடோனுக்கு 'சீல்'


புகையிலை குடோனுக்கு சீல்
x

புகையிலை குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் கடந்த 35 ஆண்டுகளாக புகையிலை தொழிற்சாலை நடத்தி வந்தார். புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்த தொழிற்சாலை தற்போது இயங்கவில்லை. இங்கு பதப்படுத்திய நிலையில் 35 டன் புகையிலை இருந்தது. இந்த புகையிலை பொருட்களை வைத்து சட்டத்திற்கு புறம்பாக செயல்பட கூடும் என சந்தேகம் எழுந்ததன் பேரில் திருவிடைமருதூர் தாசில்தார் சுசீலா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று புகையிலை இருந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.


Next Story