பிளஸ்-2 மாணவர்களுக்கு வழிகாட்டு நிகழ்ச்சி
சாத்தான்குளத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வழிகாட்டு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தூத்துக்குடி மறை மாவட்ட தென் மண்டல உரிமை வாழ்வுப்பணிக்குழு சார்பில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு மேல்படிப்புக்கான வழிகாட்டு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் புனித மரியாளின் மாசற்ற திருஇருதய ஆலய பங்குதந்தை இல்ல அரங்கில் நடைபெற்றது.
முகாமுக்கு தென்மண்டல உரிமை வாழ்வு பணிக்குழு செயலர் அருட்தந்தை ராபின் ஸ்டாலின் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர்கள் கந்தன், தமிழினியன் ஆகியோர் சட்ட கல்லூரி, அரசு கல்லூரி சேர்க்கை மற்றும் சமூக சீரழிவில் இருந்து விடுபடுவதற்கான வழி முறைகள் குறித்து பேசினர்
Related Tags :
Next Story