மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி
மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள். கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள். கலந்து கொண்டனர்.
கல்லூரி கனவு நிகழ்ச்சி
மயிலாடுதுறையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கி பேசினார். ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள 140-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வழிகாட்டி கையேடு
இதில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற இரண்டு கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி லெட்சுமியின் கலை நிகழ்ச்சி நடந்தது. முடிவில் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் ஏ.வி.சி. கல்லூரி நிறுவனங்களின் நிர்வாகியும், ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதியுமான வெங்கடராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா, உதவி கலெக்டர்கள் யுரேகா (மயிலாடுதுறை), அர்ச்சனா (சீர்காழி), நகரசபை தலைவர் செல்வராஜ், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.