பண்ணை குட்டை பணிகளை கின்னஸ் சாதனை குழுவினர் ஆய்வு


பண்ணை குட்டை பணிகளை கின்னஸ் சாதனை குழுவினர் ஆய்வு
x

எலவம்பட்டி ஊராட்சியில் பண்ணை குட்டை பணிகளை கின்னஸ் சாதனை குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை சேகரித்து நீர்வளம் நிறைந்த மாவட்டமாக மாற்றும் முயற்சியாக மாவட்டம் முழுவதும் மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 1,400 பண்ணைகுட்டைகள் அமைக்கும் பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, க.தேவராஜி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலையில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி 30 நாட்களில் நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக கந்திலி ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் அமைைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகளை டெல்லியில் இருந்து வந்துள்ள கின்னஸ் சாதனை குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது பண்ணை குட்டைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா?, நீளம், அகலம் சரியாக உள்ளதா? என கின்னஸ் சாதனை பதிவு குழு மேலாளர் வெங்கடேஷ்வரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தா, ஒன்றிய பொறியாளர் சரவணன், பணி மேற்பார்வையாளர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக டெல்லி குழுவினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

மா இலை தோரணங்களுடன், கோலமிட்டு, அலங்கரிக்கப்பட்டு பண்ணைகுட்டையில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வேடமிட்ட மாணவ- மாணவிகள் ஆடல் பாடலுடன் வரவேற்றனர்.

பண்ணைக்குட்டைகள் பணிகளை சிறப்பாக செய்து முடித்துள்ளதாக குழுவினர் பாராட்டினர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜெ.ராஜேஷ் நன்றி கூறினார்.


Next Story