திருமங்கலம் அருகே காரில் துப்பாக்கி, 113 தோட்டாக்கள் பறிமுதல் - போலீசாரை கண்டதும் தப்பியோடிய 2 பேருக்கு வலைவீச்சு


திருமங்கலம் அருகே காரில் துப்பாக்கி, 113 தோட்டாக்கள் பறிமுதல் -  போலீசாரை கண்டதும் தப்பியோடிய 2 பேருக்கு வலைவீச்சு
x

திருமங்கலம் அருகே காரில் வந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். காரில் இருந்த துப்பாக்கி, 113 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் அருகே காரில் வந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். காரில் இருந்த துப்பாக்கி, 113 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரோந்து பணி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த குராயூர்-மொச்சிக்குளம் ரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமொழி, வனிதா, நாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக கார் வந்தது. காரில் உள்ளே இருந்த நபர்கள் டார்ச்லைட் அடித்தபடியே வந்தனர். போலீசார் சந்தேகமடைந்து காரை நிறுத்த முயன்றனர். அப்போது கார் நிற்காமல் சென்றது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். போலீசார் தங்களை பின்தொடர்வதை அறிந்த காரில் சென்ற மர்மநபர்கள் காரை மின்னல் வேகத்தில் ஓட்டி சென்றனர். போலீசாரும் விடாமல் காரை துரத்தியபடி சென்றனர்.

துப்பாக்கி, தோட்டாக்கள்

இந்த கார் அரசபட்டி-கீழக்கோட்டை ரோட்டிற்கு திரும்பி செல்லவே போலீசார் தொடர்ந்து விரட்டி பிடிக்க முயன்றனர். அப்போது அரசபட்டி-கீழக்கோட்டை நடுவே முத்துமாரி என்பவர் தோட்ட பகுதியில் திடீரென காரை நிறுத்திவிட்டு 2 பேர் கீழே இறங்கி தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து போலீசார் அந்த காரை சோதனையிட்ட போது காரில் ஏர்கண் துப்பாக்கி மற்றும் 113 தோட்டாக்கள் இருந்தன. மேலும் பெரம்பலூர் மாவட்டம் ரைபிள் கிளப் அடையான அட்டை, டிரைவிங் லைசென்சு, ஆதார்காா்டு இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதில் இருந்த முகவரியில் திருமங்கலம் காளிமுத்துநகரை சோ்ந்த பாலகணேஷ் என இருந்தது. இவர் தி.மு.க. பிரமுகர் என விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story