திருச்சி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி
திருச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது இந்த விமானத்தில் ஐதராபாத்திற்கு பயணம் செய்ய இருந்த நாகை மாவட்டம், வேதாரண்யம், அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் ராஜம் (வயது 23) என்பவரிடம் இருந்து வெடிக்காத துப்பாக்கி தோட்டா இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அவர் இந்த தோட்டா எனது பையில் எப்படி வந்தது என தெரியவில்லை என தெரிவித்தார். எனினும் போலீசார் தோட்டாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
Related Tags :
Next Story