2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருவாரூர்
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கொட்டையூர்- கும்பகோணம் சாலை பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சிவா (வயது25), நீடாமங்கலம் பாப்பையந்தோப்பு பகுதியை சேர்ந்த அழகேசன் மகன் அரவிந்த் (23) ஆகிய 2 பேரும் பல்வேறு வழக்குகளில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவா, அரவிந்த் ஆகியோரிடம் அளித்தார்.
Related Tags :
Next Story