குண்டாடா அரசு பள்ளியில் ஓவிய போட்டி
குண்டாடா அரசு பள்ளியில் ஓவிய போட்டி
கோத்தகிரி
தமிழகத்தில் பள்ளி கல்வி துறையின் கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து மாணவ-மாணவிகளும் பங்கேற்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பிரிவுக்கான கலைத்திருவிழா, கோத்தகிரி வட்டார கல்வி அலுவலர்கள் பாலமுருகன், சுப்பிரமணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் குண்டாடா அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், பள்ளி மேலாண்மை குழு தலைவி யாஜி அம்மு ஆகியோர் முன்னிலையில் மாணவ-மாணவிகள் ஓவியம், பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல், ஆங்கிலத்தில் கதை கூறுதல், மனித நேய பாடல், நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு மாணவ-மாணவிகளை தயார்படுத்தும் வகையில் ஆங்கில பட்டதாரி ஆசிரியை மல்லிகா குமார், நாட்டுப்புற கலைஞர் கணேசன் ஆகியோர் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகின்றனர்.