மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா


மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் சமத்துவபுரம் அருகே மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் சமத்துவபுரம் அருகே மாசாணியம்மன் கோவிலில் மயான பூஜை மற்றும் குண்டம் திருவிழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஓசூர் தேர்பேட்டையில் உள்ள தெப்பக்குளத்தில் இருந்து, கோவில் தர்மகர்த்தா பாண்டியன் தலைமையில் ஆண், பெண் பக்தர்கள் அம்மனுக்கு பால் குடம் எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை சென்றடைந்தனர். மேலும், பல்லக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story