தேவி கருமாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா


தேவி கருமாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
x

குன்னூர் அருகே தேவி கருமாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே பேரக்ஸ் சின்ன வண்டிசோலை கிராமத்தில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 118-ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 26-ந் தேதி கணபதி ஹோமம், பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சி, கொலு பூஜை, 27-ந் தேதி காப்பு கட்டுதல், அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து கரகம் கூர்காகேம்ப் ஆற்றில் அலங்கரிக்கப்பட்டு, அங்கிருந்து மேளதாளம் முழங்க கருமாரியம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர். அத்துடன் தேர் ஊர்வலமும் நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, உச்சி கால பூஜை, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் சாட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story