மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா


மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
x

கோத்தகிரி ஹேப்பி வேலி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி ஹேப்பி வேலி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

குண்டம் திருவிழா

கோத்தகிரி ஹேப்பி வேலி பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாடு, மண்டல பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு பாண்டியன் பூங்காவில் இருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று அதிகாலை 5 மணிக்கு குண்டத்திற்கு அக்னி வளர்த்தல், காலை 9 மணிக்கு கடைவீதி விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம், 11 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், 11.30 மணிக்கு கும்மிபாட்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

மதியம் 12.30 மணிக்கு பச்சை மரத்தையன் பூஜை மற்றும் உச்சிகால பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து 1 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேர்த்திக்கடன் செலுத்தினர்

விரதம் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் குண்டத்தில் இறங்கினர். சிலர் குழந்தைகளை கையில் எடுத்து சென்றனர். இதன் மூலம் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடல், மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜை மற்றும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 5 மணிக்கு தர்மோனா ஆற்றங்கரையில் அம்மனை வழியனுப்பி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


Next Story