காரக்கொரையில் குண்டம் திருவிழா


காரக்கொரையில் குண்டம் திருவிழா
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி காரக்கொரையில் குண்டம் திருவிழா நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே ஜெகதளாவை தலைமையிடமாக கொண்ட ஆரூர் கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்கள் ெஹத்தையம்மன் பண்டிகையை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடுகின்றனர். ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, ேபரட்டி, மல்லிெகாரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராம மக்கள் வருகிற 9-ந் தேதி பண்டிகையை கொண்டாட உள்ளனர். இதையொட்டி பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து, ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டனர்.அங்கு அருள்வாக்கு கூறினர். பின்னர், சுத்தகல் கோவிலில் நடந்த பூஜையில் பங்கேற்று, கிராம மக்களுக்கு ஆசி வழங்கினர். தொடர்ந்து பக்தர்கள் காரக்கொரை மடிமனைக்கு வந்தனர். இந்தநிலையில் நேற்று ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி காரக்கொரை மடிமனையில் குண்டம் திருவிழா நடைபெற்றது. சிறப்பு பூஜை நடத்தி, கோவில் பூசாரி குண்டம் இறங்கினார். பின்னர் கும்பம் எடுத்து வந்த பூசாரி உள்பட பக்தர்கள் 11 பேரும் குண்டம் இறங்கினர். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், ஆடல் பாடல்களுடன் வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story