கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பாலியல் வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அண்டமி கிராமம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் பாஸ்கர் என்கிற ரெங்கதுரை (வயது40). பாலியல் வழக்கில் தொடர்புடையவர். இந்த வழக்கில் ஏற்கனவே பாஸ்கர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரையின்பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து பாஸ்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பாஸ்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான நகல்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் சமர்ப்பித்தனர்.