கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

தஞ்சையில் ஆடிட்டர் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சாவூர்


தஞ்சையில் ஆடிட்டர் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஆடிட்டர் கொலை

தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது45). ஆடிட்டர். இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பண்ணையில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் திடீரென பண்ணைக்குள் புகுந்து மகேஸ்வரனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.இந்த கொலை தொடர்பாக தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தை ஆனந்தம்நகர் 2-வது தெருவை சேர்ந்த பாண்டிசுரேஷ் என்பவரின் மகன் அரவிந்த் (27) உள்பட சிலரை கைது செய்தனர். பின்னர் இவர்கள் தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து அரவிந்த் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அரவிந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


Next Story