குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு


குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
x
திருப்பூர்


திருப்பூர் முருங்கப்பாளையம் பகுதியில் சாகுல் அமீது என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி கைப்பையில் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அவரை கீழே தள்ளிவிட்டு அவரிடம் இருந்து பணப்பையை பறித்து சென்றது தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுரை மேலூரை சேர்ந்த ராஜ்குமார் (25) என்பவரை கைது செய்தனர்.

இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார். அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள ராஜ்குமாரிடம், ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை திருப்பூர் மாநகரில் 19 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Next Story