துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் வீர வணக்க நாள் அனுசரிப்பு
துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி நாடு முழுவதும் பணியின் பொது வீர மரணமடைந்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நாடு முழுவதும் உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை சார்பில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் தலைமை தாங்கினார். அப்போது உயிர் நீத்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.