தட்சிணா மூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா


தட்சிணா மூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா
x

புளியரை தட்சிணா மூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி

புளியரை தட்சிணா மூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தட்சிணாமூர்த்தி கோவில்

தமிழக- கேரள எல்லைப் பகுதியில் செங்கோட்டை அருகே அமைந்துள்ளது புளியரை தட்சிணாமூர்த்தி கோவில். இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்தி, குருபகவானான தட்சிணா மூர்த்திக்கு தனி சன்னதி என்பது கூடுதல் தனி சிறப்பாகும்.

இக்கோவில் தென்னகத்தின் சிருங்கேரி என்றும், குருஸ்தலமாக பக்தர்களால் போற்றப்பட்டு வருவதால் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாழக்கிழமைதோறும் அதிகளவு பக்தர்கள் வந்து செல்வார்கள்

குருப்பெயர்ச்சி விழா

இந்நிலையில் நடப்பாண்டில் குரு பெயர்ச்சி விழாவான நேற்று முன்தினம் குருபகவான் மீனராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியானார்.

இதையொட்டி காலை 9 மணிக்கு தேவாரம், இன்னிசை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு ருத்ர ஏகாதசி நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் ரத்தினவேல், மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.


Next Story