நீலாயதாட்சியம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி வழிபாடு
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது.
நாகப்பட்டினம்
நாகையில், சப்தவிடங்க தலங்களுள் ஒன்றான நீலாயதாட்சியம்மன் கோவில் உள்ளது. குருப்பெயர்ச்சியையொட்டி இக்கோவிலில் தனி சன்னதியில் அமைந்துள்ள குருதட்சிணாமூர்த்திக்கு நேற்று முன்தினம் இரவு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது. பின்னர் திரவிய பொடி, மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தயிர், பன்னீர், கரும்பு சாறு, தேன், பால், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று.
இதில் பூஜிக்கப்பட்ட புனித நீர்கொண்டு நேற்று முன்தினம் இரவு சாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது. அதையடுத்து இரவு 11.25 மணிக்கு குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். அப்போது சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story