குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா


குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூரில் குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா நடந்தது

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஆண்டு விழா அபிராமி கலையரங்கில் நடந்தது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் ஸ்ரீராம் வரவேற்றார். கோவில் கண்காணிப்பாளர் மணி, பள்ளிக்குழு உறுப்பினர்கள் கணேச குருக்கள், மணி, கோவில் காசாளர் கலியராஜ், டாக்டர் திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் விருதகிரி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கினர். முன்னதாக பள்ளி சார்பில் பள்ளி குழு உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து கேடயங்கள் வழங்கினர். இதில் இசை பள்ளி ஆசிரியர் உமா சங்கர் தலைமையில் ஏராளமான மாணவர்கள் மங்கள வாத்தியம் முழங்கினர். விழாவில் பெற்றோர்கள் ஆசிரியர்கள், , மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story