திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா


திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா
x

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி மீனராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார்.

தஞ்சாவூர்

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி மீனராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார்.

குருப்பெயர்ச்சி விழா

தஞ்சையை அடுத்த திட்டை என்று அழைக்கப்படும் தென்திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றான இக்கோவில், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றது. இந்த கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் குருபகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைவதையொட்டி வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறும். அதன்படி இன்று (சனிக்கிழமை) இரவு 11.21 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார். குருப்பெயர்ச்சியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள்.

சிறப்பு ஏற்பாடு

பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் ஆங்காங்கே கட்டைகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மற்றும் சிறப்பு வழி, முக்கிய பிரமுகர்கள் வழி என தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்காக தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story