ஓசூர் பிரித்தியங்கரா தேவி கோவிலில் குருபவுர்ணமி சிறப்பு வழிபாடு


ஓசூர் பிரித்தியங்கரா தேவி கோவிலில் குருபவுர்ணமி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 4 July 2023 1:00 AM IST (Updated: 4 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:-

ஓசூர் அருகே மோரனப்பள்ளி கிராமத்தில் ராகு கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்படுவது வழக்கம். மேலும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி தினம் குரு பூர்ணிமா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரு பவுர்ணமி தினமான நேற்று இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக கோவிலில் உள்ள மறைந்த ஏழுமலை சுவாமி மகா குரு சன்னிதானத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, விசேஷ அலங்காரங்களுடன் அம்மன் அருள் பாலித்தார். அதேபோல ராகு, கேது, மகா காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனுக்கு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவில், யாக சாலையில் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. இதில், தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மாவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பு பூஜை நடத்தி அம்மனை வழிபட்டனர்.


Next Story