பெட்டிக்கடையில் குட்கா, மதுபாட்டில்கள் பதுக்கிய 3பேர் கைது


பெட்டிக்கடையில் குட்கா, மதுபாட்டில்கள் பதுக்கிய   3பேர் கைது
x

கயத்தாறில் பெட்டிக்கடையில் குட்கா, மதுபாட்டில்கள் பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு காவல்நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் காவலர்கள் சத்திரியன், பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள பஜாரில் ராஜாபுதுக்குடியை சேர்ந்த ஒரு சிறுவன் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளை பயன்படுத்துவதை கண்டு பிடித்தனர். சிறுவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட பெட்டிக்கடையில் புகையிலை பொருளை வாங்கியதாக தெரிவித்தான். அந்த பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். கடையில் சோதனை நடத்தியதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட 30 கிலோ குட்கா மற்றும் 58 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடை ஊழியர்களான கயத்தாறு வடக்கு தெருவை சேர்ந்த உச்சினிமாகாளி(வயது 37), கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் சேர்ந்த மணிகண்டன்(30), சாலிவாகனார் தெருவை சேர்ந்த சுடலைமணி( 27) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மொத்த வியாபாரிகள் குறித்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story