ரூ.27 லட்சம் குட்கா கடத்தல் வழக்கில் தலைமறைவான 20 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்
குருபரப்பள்ளி அருகே ரூ.27 லட்சம் குட்கா கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள 20 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
குருபரப்பள்ளி
குட்கா கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மேல் கொண்டப்ப நாயனப்பள்ளி பகுதியில் ஒரு கோழிப்பண்ணையில் கன்டெய்னர் லாரியில் இருந்து சிலர் குட்காவை இறக்கி கொண்டு இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் குட்கா இறக்கியவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதுெதாடர்பாக கிருஷ்ணகிரி ராஜீவ் நகரை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக் (வயது24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 4 டன் குட்கா மற்றும் கன்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவரிடம் ேபாலீசார் விசாரணை நடத்தியபோது பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வரப்பட்டது என தெரிய வந்தது.
20 பேருக்கு வலைவீச்சு
இந்த குட்கா கடத்தலில் கன்டெய்னர் லாரி உரிமையாளர் ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கர் பனவட்டம்பாடியை சேர்ந்த சரத்குமார் (26), மணியாண்டபள்ளி ராஜேஷ், நிதிஷ்குமார், அகிலன், மஞ்சுநாதன், சதீஷ்பாபு (40), முனுசாமி (40), ராமசாமி, ராஜ்குமார், பெங்களூரு சுனில், மாதன், மணிகண்டன், சச்சின், திருப்பதி, மோனிஷா, புட்டாகீர், மாணிக்கம், தேவேந்திரன், சத்யமூர்த்தி, விஜயகுமார் ஆகிய 20 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.