ரூ.1¼ லட்சம் குட்கா பறிமுதல்


ரூ.1¼ லட்சம் குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 26 Dec 2022 6:45 PM GMT (Updated: 26 Dec 2022 6:45 PM GMT)

கூடலூர் அருகே மளிகை கடையில் பதுக்கி வைத்து விற்ற ரூ.1¼ லட்சம் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே மளிகை கடையில் பதுக்கி வைத்து விற்ற ரூ.1¼ லட்சம் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

குட்கா பறிமுதல்

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், கூடலூர் பகுதியில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் (குட்கா) விற்பனை செய்யும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெள்ளதங்கம், சண்முகராஜ், குற்ற தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இப்ராகிம் மற்றும் தனிப்படை போலீசார் கூடலூர் அருகே புழம்பட்டி பகுதியில் நேற்று காலையில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.அப்போது ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் கடைக்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது குட்கா பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து 2,450 பண்டல்களில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடை வியாபாரியை பிடித்து விசாரணை செய்தனர்.

வியாபாரி கைது

பின்னர் கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து புழம்பட்டி பகுதியை சேர்ந்த முருகானந்தன் (வயது 47) என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 500 இருக்கும்.குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் எந்த நேரத்திலும் தகவல் கொடுக்கலாம். அவர்களின் பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story