குட்கா விற்ற கடைக்கு 'சீல்'
குட்கா விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருப்பத்தூர்
குட்கா விற்ற கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சையது முஷமில் பாஷா (வயது 22) என்பவருக்கு சொந்தமான கடையில் குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.2 ஆயிரத்திற்கும் மேலான குட்கா பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயசூர்யா அளித்த புகாரின்பேரில் சையது முஷமில் பாஷாவை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story