மோட்டார்சைக்கிளில் குட்கா கடத்தியவர்கைது
மோட்டார்சைக்கிளில் குட்கா கடத்தியவர்கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
மோட்டார்சைக்கிளில் குட்கா கடத்தியவர்கைது செய்யப்பட்டார்.
பேரணாம்பட்டு டவுன் அரவட்லா கூட்டு ரோட்டில் சப்-இன்ஸ் பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பேரணாம்பட்டு டவுன் உமர் வீதியை சேர்ந்த முகமதலி (வயது 40) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை சோதனையிட்டதில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்ததை மோட்டார்சைக்கிளுடன் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலத்திலிருந்து இதனை கடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
அதன்பின் முகமதலியை குடியாத்தம் சப்-மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story